/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 25ல் வானொலியில் ஒலிபரப்பு
/
பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 25ல் வானொலியில் ஒலிபரப்பு
பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 25ல் வானொலியில் ஒலிபரப்பு
பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 25ல் வானொலியில் ஒலிபரப்பு
ADDED : பிப் 22, 2024 11:43 PM
புதுச்சேரி: பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 25ம் தேதி ஒலிப்பரப்பாகிறது.
இது குறித்து புதுச்சேரி அகில இந்திய வானொலி நிகழ்ச்சி பிரிவு தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றும் மன் கீ பாத் நிகழ்ச்சி வரும் 25ம் தேதி காலை 11 மணிக்கு ஒலிப்பரப்பாகிறது.
இதனை தொடர்ந்து உடனடியாக மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழ் மொழி பெயர்ப்பு மனதின் குரலாக ஒலிபரப்பாகும்.
இதன் மறுஒலிப்பரப்புஅன்றிரவு 8 மணிக்கு செய்யப்படும்.
இந்த இரு நிகழ்ச்சிகளும் புதுச்சேரி அகில இந்திய வானொலியின் மத்திய அலை வரிசை 1215 கிலோ ெஹர்ட்ஸ் மற்றும் ரெயின்போ பண்பலை 102.8 மெகா ெஹர்ட்ஸ் அலை வரிசைகளில் ஒலிப்பரப்பாகும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.