/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுவையான கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு புதுச்சேரி சூக்கா நிறுவனத்தில் துவங்கியது
/
சுவையான கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு புதுச்சேரி சூக்கா நிறுவனத்தில் துவங்கியது
சுவையான கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு புதுச்சேரி சூக்கா நிறுவனத்தில் துவங்கியது
சுவையான கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு புதுச்சேரி சூக்கா நிறுவனத்தில் துவங்கியது
ADDED : நவ 11, 2024 06:55 AM

புதுச்சேரி : சூக்கா சாக்லெட் நிறுவனத்தில் 12ம் ஆண்டு கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பிற்காக பழக்கலவை ஊற வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி மிஷன் வீதி-கந்தப்ப முதலியார் வீதி சந்திப்பில் சூக்கா சாக்லெட் ஷோரூம் உள்ளது. சூக்கா சாக்லெட் நிறுவனத்தில் புகழ் பெற்ற தலைவர்களின் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், அவர்களை சாக்லெட் சிலையாக வடிவமைத்து அவ்வப்போது காட்சிப்படுத்தி வருகிறது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், நடிகர் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், இந்திய விமானப்படை பைலட் அபிநந்தன், பாடகர் எஸ்.பி.,பாலசுப்ரமணியம் ஆகியோரின் உருவங்களை சாக்லெட்டினால் வடிவமைத்து, காட்சிக்கு வைத்து அனைவரையும் கவர்ந்தது.
இங்கு, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, 12ம் ஆண்டு கேக் தயாரிப்பதற்கான பழக்கலவை ஊற வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இயக்குநர்கள் பாலச்சந்திரன், சித்ரா பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சத்யா சிறப்பு பள்ளி நிறுவனர் சித்ரா அமீத்ஷா, நியூ மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் அர்ஜூன் சுந்தரம், ஜீவிதா அர்ஜூன், அரோமா சாப்ட் நிறுவன நிர்வாகி அஜய் வீரமணி, பிரேம் ராஜா, மீரா அபேய் ஜோசப் மற்றும் கே.வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, பழக்கலவை ஊற வைக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, மொத்தம் 300 கிலோ உலர் பழங்கள், நட்ஸ்கள், கேக் தயாரிப்பதற்காக ஊற வைக்கப்பட்டது.
இயக்குநர் பாலச்சந்திரன் கூறும்போது, 'சுவையான கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்க, இந்தாண்டு பல்வேறு இடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான உலர்பழங்கள், நட்ஸ்களை கொண்டு வந்துள்ளோம். குறிப்பாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெக்கான் நட்ஸ் கொண்டு வந்து கலக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம் முதல் இந்த பழக்கலவையில் இருந்து, சுவையான கிறிஸ்துமஸ் கேக் தயாரித்து, மும்பை, டில்லி, ஹைதராபாத், சென்னை, கோவை பெருநகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றார்.
ஏற்பாடுகளை சூக்கா தலைமை செப் ராஜேந்திரன் தங்கராசு, விஜயகுமார் செல்லையா ஆகியோர் செய்திருந்தனர்.