தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திறக்கும் முன் சுரங்க பாதையை பயன்படுத்திய பொது மக்கள்

திறக்கும் முன் சுரங்க பாதையை பயன்படுத்திய பொது மக்கள்

திறக்கும் முன் சுரங்க பாதையை பயன்படுத்திய பொது மக்கள்


ADDED : ஜன 16, 2025 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2025 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நுாறடிச்சாலை ரயில்வே சுரங்கபாதை பணி முழுமை பெறுவதற்கு முன், மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

புதுச்சேரி இந்திரா சிக்னலில் இருந்து கடலுார் செல்லும் நுாறடிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்த ரயில்வே கேட் முழுதும் மூடப்பட்டது. ரயில்வே கேட் அருகில் வசிக்கும் மக்கள், மேம்பாலம் வழியாக கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் மூடப்பட்ட ரயில்வே கேட் கீழ், ரெடிமேட் கான்கீரிட் பிரிகாஸ்ட் முறையில் சுரங்கப் பாதை ரயில்வே துறை மூலம் அமைக்கப்பட்டது.

சுரங்க பாதைக்கு வடக்கு மற்றும் தெற்கு பக்கம் தலா 75 மீட்டர் நீளத்திற்கு சர்வீஸ் சாலை, வடிகால் வாய்க்கால் அமைக்க எஸ்.ஐ.டி.பி.ஐ., வங்கியில், ரூ. 5.38 கோடி புதுச்சேரி அரசு கடன் பெறப்பட்டது. கடன் தொகை மூலம் பொதுப்பணித்துறை ஒப்பந்த பணிக்கு டெண்டர் விட்டது.

கடந்த ஆண்டு மே 10ம் தேதி சர்வீஸ் சாலை பணிகள் துவங்கியது. 10 மாதத்தில் முடிக்க வேண்டிய பணி இதுவரை முழுமை பெறவில்லை. மழையின்போது சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

சுரங்கபாதையில் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், திறப்பு விழாவுக்கு முன்னதாக பொதுமக்கள் பயன்படுத்த துவங்கி விட்டனர். பைக்குகளில் சுரங்கப்பாதை வழியாக கடந்து செல்கின்றனர். மின் விளக்குகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us