ADDED : நவ 02, 2024 06:33 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையன்று 21 தீ விபத்துகள் நடந்து, 5.92 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
இந்தாண்டு மழை காரணமாக தீ விபத்து குறைந்தது. 7 தீ விபத்துகள் நடந்து, 57 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது.
புதுச்சேரியில் 3 தீ விபத்துகள் நடந்து, 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், வில்லியனுாரில் இரண்டு தீ விபத்துகளில் 45 ஆயிரம், டி நகர் பகுதியில் ஒரு தீ விபத்தில் 6 ஆயிரம், திருக்கனுாரில் ஒரு விபத்தில் 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.
கடந்தாண்டு, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் மொத்தம் எட்டு தீ விபத்துகள் நடந்தது. இந்தாண்டு ஒரு தீ விபத்துகள் கூட நடக்கவில்லை.
தீயணைப்புத்துறையின் கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ கூறுகையில், 'தீபாவளியன்று தீ விபத்துகள் அதிக அளவில் நடக்கும். இந்தாண்டு மழையின் காரணமாக ஈரப்பதம் இருந்ததால் தீ விபத்துகளுக்கான வாய்ப்புகளும் குறைந்தது' என்றார்.