/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊசுட்டேரி நிரம்பியது: உபரி நீர் திறப்பு
/
ஊசுட்டேரி நிரம்பியது: உபரி நீர் திறப்பு
ADDED : டிச 05, 2024 06:40 AM
புதுச்சேரி; ஊசுட்டேரி முழு கொள்ளவை எட்டியுள்ளதால், உபரி நீர் பத்துக்கண்ணு மதகு வழியாக திறக்கப்பட்டது.
புதுச்சேரியில் பெரிய ஏரியான ஊசுட்டேரிக்கு, வடகிழக்கு பருவமழை மற்றும் வீடூர் அணை திறக்கும் போது, சங்கராபரணி ஆற்றுக்கு வரும் நீர், சுத்துக்கேணி பகுதியில் உள்ள வாய்க்கால் வழியாக வரும்.
கன மழை பெய்ததை அடுத்து, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அனைத்து நீர் நிலைகளும் நிரம்பின.
இதனால் ஏரி முழு கொள்ளவை எட்டியது. தொடர்ந்து, ஏரிக்கு நீர்வரத்து உள்ளது.
இந்நிலையில் ஏரியில் இருந்து உபரி நீர் பத்துக்கண்ணு பகுதியில் உள்ள மதகுகள் வழியாக திறக்கப்பட்டது.
அமைச்சர் சாய் சரவணன் குமார் மதகின் வழியாக உபரி நீரை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.