/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் பா.ஜ.,வுக்கு தி.மு.க., ஆதரவு நிலைப்பாடு
/
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் பா.ஜ.,வுக்கு தி.மு.க., ஆதரவு நிலைப்பாடு
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் பா.ஜ.,வுக்கு தி.மு.க., ஆதரவு நிலைப்பாடு
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் பா.ஜ.,வுக்கு தி.மு.க., ஆதரவு நிலைப்பாடு
ADDED : டிச 26, 2024 05:42 AM
அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
புதுச்சேரி: சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் புதுச்சேரி தி.மு.க., பா.ஜ.,வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என, அ.தி.மு.க., விமர்சித்துள்ளது.
அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது;
சபாநாயகர் செல்வம் கூறியதுபோல்,அரசு விழாக்களில் சபாநாயகரை அழைக்க வேண்டும் என்ற விதி யூனியன் பிரதேச பிசினஸ் ரூலில் இல்லை. இது குறித்த ஆதாரம் கேட்டதற்கு, அரசு விழா மேடையில் கவர்னர், முதல்வர் உள்ளிட்டோர் அமரும் இருக்கைமுன்னுரிமை ஒதுக்கீடு குறித்து செய்தி விளம்பரத்துறை வெளியிட்டுள்ள அரசாணையை காண்பிக்கிறார்.
புதுச்சேரி பா.ஜ., அரசுக்கு தி.மு.க., எப்போதும் துணை நிற்கும் என்பதை காங்., மாநில தலைவர் அறியாமல் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் காங்., தி.மு.க., ஆதரிக்கும் என தெரிவித்துவிட்டார். ஆனால் சபாநாயகர் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது தி.மு.க., ஆதரவு அளிக்காது என அக்கட்சி தெரிவித்துவிட்டது.மத்திய பா.ஜ.,வை எதிர்ப்பதும், பிரதமர், அமைச்சர்கள் தமிழகம் வந்தால் வரவேற்பதும் தமிழக தி.மு.க.வின் இரட்டை வேடம் போல், புதுச்சேரி தி.மு.க., எடுத்துள்ள நிலைப்பாட்டை புதுச்சேரி சிறுபான்மை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சபாநாயகர் மீது ஒவ்வொரு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது அப்பதவியை கலங்கப்படுத்தும் செயல். இந்நிகழ்வுகளுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்றார்.