/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி சிறையில் அடைப்பு
/
பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி சிறையில் அடைப்பு
ADDED : ஜன 25, 2024 04:24 AM

திருபுவனை : திருபுவனை அருகே மாமுல் கேட்டு மளிகை கடை மற்றும் கேபிள் டிவி., ஆப்ரேட்டர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடியை போலீசார் சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி, திருபுவனை அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் நடுத்தெருவில் கே.ஜி.எஸ்., என்ற பெயரில் மளிகை கடை உள்ளது. கலிதீர்த்தாள்குப்பம் சுடுகாட்டு வீதியில் வசிக்கும் ரவுடி கூழ்பானை சுகு (எ) சுகுமாறன், 40, நேற்று முன்தினம் மளிகை கடை உரிமையாளரை மிரட்டும் வகையில் கடை மீது பெட்ரோல் குண்டு வீசினார்.
இதனை அருகில் வசிக்கும் கேபிள் டி.வி., ஆபரேட்டர் சரவணன், 45, தட்டிக்கேட்டார். ஆத்திரம் அடைந்த ரவுடி சுகுமாறன், மற்றொரு பெட்ரோல் குண்டை, சரவணன் வீட்டின் மீது வீசினார். இதில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்த புகாரின்பேரில் திருபுவனை இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரவுடி சுகுமாறை கைது செய்தனர்.
அவரை போலீசார் நேற்று புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். ரவுடி சுகுமாறன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.