/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் இடத்தை அபகரித்த ஆளுங்கட்சி பிரமுகர்கள்; அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு

ADDED : அக் 02, 2024 03:39 AM
புதுச்சேரி : அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் அளித்த பேட்டி:
காரைக்காலில் பார்வதி ஈஸ்வரர் கோவில் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் சம்மந்தப்பட்ட தொகுதியில் அவருக்கு வேண்டப்பட்ட சிலரால், அதிகாரிகளின் துணையோடு போலி பத்திரம் தயாரித்து, அதற்காக பல கோடி ரூபாய் பெறப்பட்டதாக தெரிகிறது.
மத்திய அரசின் கெயில் நிறுவனம் புதுச்சேரி அரசிடம் காரைக்காலில் இடம் கேட்டதற்கு அரசு சார்பில், 10 ஏக்கர் வழங்கப்பட்டது. அந்த நிறுவனம், 2 ஏக்கரை பயன்படுத்திக்கொண்டு மீதி, 8 ஏக்கர் இடத்தை மீண்டும் அரசிடமே ஒப்படைத்தது.
அந்த இடம் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு அபகரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் அதிகாரியும், அமைச்சருக்கு வேண்டிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்படவில்லை.கோவில் இடம் அபகரிக்கப்பட்டதில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற முதல்வரும், கவர்னரும் பரிந்துரைக்க வேண்டும்.
பிரதமர் மோடி, 75 இடங்களில் தியாகிகளின் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த சின்னம் நிறுவுவதற்கு தனி நபர் ஒருவர் பெரிய அளவில் பணம் வசூல் செய்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.