/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தங்கமயில் ஜூவல்லரியில் ஆடிப்பெருக்கு விற்பனை காலை 6:00 மணிக்கு துவக்கம்
/
தங்கமயில் ஜூவல்லரியில் ஆடிப்பெருக்கு விற்பனை காலை 6:00 மணிக்கு துவக்கம்
தங்கமயில் ஜூவல்லரியில் ஆடிப்பெருக்கு விற்பனை காலை 6:00 மணிக்கு துவக்கம்
தங்கமயில் ஜூவல்லரியில் ஆடிப்பெருக்கு விற்பனை காலை 6:00 மணிக்கு துவக்கம்
ADDED : ஆக 03, 2025 05:17 AM
புதுச்சேரி: தங்கமயில் ஜூவல்லரியில் இன்று ஆடிப்பெருக்கையொட்டி, காலை 6:00 மணிக்கு சிறப்பு விற்பனையை துவங்குகிறது.
மதுரையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம், தமிழகம் முழுவதும் 64 கிளைகள், 30 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
இன்று (3ம் தேதி) ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு விற்பனையை காலை 6:00 மணி முதல் நிறுவனம் துவங்க உள்ளது.
ஆடிப்பெருக்கு அன்று கட்டடம் கட்ட பூமி பூஜை செய்வது, வியாபாரம் துவங்குவது, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதும் விசேஷமாக உள்ளது. அந்த நாளில் தங்கம், வைரம், வெள்ளி போன்ற ஐஸ்வரியம் நிறைந்த பொருட்களை வாங்குவதால் நல்ல பயன் அளிக்கும். ஆடிப்பெருக்கு அன்று தங்க மயிலியில் தங்க நகைகள் வாங்குவது சிறப்பாக அமையும்.
ஆடிப்பெருக்கு முன்னிட்டு தங்கமயில் நிறுவனத்தில், வாடிக்கையாளர்கள் வாங்கும் 10 கிராம் தங்கத்திற்கு அரை கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது. ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் வாங்கும் வெள்ளி நகைகள் மற்றும் பரிசுப் பொருட்களுக்கு ரூ. 2,500 முதல் 10,000 வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
1 முதல் 5 காரட்டிற்கு மேல் வாங்கும் வைர நகைகளுக்கு ஒரு கிராம் முதல் 3 கிராம் வரை தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. ரூ. 5 லட்சத்திற்கு மேல் வெள்ளிப் பொருட்கள், வெள்ளி நகைகள் வாங்கும் அனைவருக்கும் ஐபோன் 16 மொபைல் நிச்சய பரிசாக வழங்கப்படுகிறது.
தங்கமயில் நிறுவனத்தில் 100 சதவீதம் ஹால்மார்க் தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இன்று நகை வாங்கும் அனைவருக்கும் வேதம் கற்ற ஆச்சார்யார்களால் சிறப்பு பூஜை செய்து வழங்கப்படுகிறது.