/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எடை அளவை துறையின் சிறப்பு முகாம் இன்று துவங்கி, 29ம் தேதி வரை நடக்கிறது
/
எடை அளவை துறையின் சிறப்பு முகாம் இன்று துவங்கி, 29ம் தேதி வரை நடக்கிறது
எடை அளவை துறையின் சிறப்பு முகாம் இன்று துவங்கி, 29ம் தேதி வரை நடக்கிறது
எடை அளவை துறையின் சிறப்பு முகாம் இன்று துவங்கி, 29ம் தேதி வரை நடக்கிறது
ADDED : நவ 12, 2024 07:26 AM
புதுச்சேரி: வணிகர்களுக்கான எடை அளவை துறையின் சிறப்பு முகாம் இன்று துவங்கி, 29ம் தேதி வரை நடக்கின்றது.
இது குறித்து சட்டமுறை எடை அளவை துறை கட்டுப்பாட்டு அதிகாரி மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தட்டாஞ்சாவடியில் இயங்கி வரும் சட்டமுறை எடையளவுத் துறை அலுவலகத்தில் எடைக்கற்கள், அளவைகள் சரிபார்த்து சான்றிதழ் வழங்கப்படுகின்றது. வணிகர்கள் தங்களுடைய பயன்பாட்டில் இருக்கும் எடைகள், அளவைகள், எடையளவு இயந்திரங்களுக்கு உரிய தொகை செலுத்தி, அரசாங்க முத்திரையை பதித்து கொள்ள வேண்டும். அதற்கான சான்றிதழ்களையும் பெற்று அதனை கடைகளில் பார்வைக்கு வைக்க வேண்டும்.
வணிகர்கள் நலன் கருதி, வியாபாரம் செய்து வரும் வியாபார மையங்களுக்கே சென்று காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை சிறப்பு முகாம் நடத்த சட்டமுறை எடை அளவை துறை ஆய்வாளர்கள் முத்திரையிட உள்ளனர்.
இந்த சிறப்பு முகாம் லாஸ்பேட்டை உழவர்சந்தையில் இன்று 12ம் தேதி துவங்குகிறது. 14ம் தேதி சின்னக்கடை மார்க்கெட் உழவர்சந்தை, 16ம் தேதி பெரியமார்க்கெட், 19ம் தேதி காலையில் மதகடிப்பட்டு சந்தை, மாலை மடுகரை சந்தை, 21ம் தேதி பாகூர் சந்தை, 25ம் தேதி முத்தியால்பேட்டை மார்க்கெட், 27 ம் தேதி திருக்கனுார் மார்க்கெட், 29ம் தேதி வில்லியனுார் மார்க்கெட் பகுதிகளில் நடக்கின்றது. இந்த வாய்ப்பினை வணிகர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

