/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேர்மன் இருக்கை மாணவி மகிழ்ச்சி
/
சேர்மன் இருக்கை மாணவி மகிழ்ச்சி
ADDED : நவ 15, 2024 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குழந்தைகள் தினவிழாவையொட்டி, பள்ளி மாணவியை சேர்மன் இருக்கையில் அமர வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வேல்ராம்பட்டில் ஒய்ஸ்மேன் பள்ளியில் நேற்று குழந்தைகள் தினவிழா நேற்று கொண்டாடப் பட்டது.
இவ்விழாவையொட்டி, பள்ளி சேர்மன், சந்திரமவுளி, பள்ளியில் பயிலும், மாணவி ஒருவருக்கு சேர்மன் பதவி கொடுத்து, நியமன உத்தரவுடன், இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார்.
தொடர்ந்து, ஒரு மாணவிக்கு முதல்வர் இருக்கையும், மற்றோரு மாணவிக்கு துணை முதல்வர் இருக்கையில் அமர வைத்தார்.
இந்த சம்பவம், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.