/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பரம்பொருள் தன்னையே பல பாகங்களாக பிரிக்கிறது'; சுவாமி சுத்தானந்த கிரி சொற்பொழிவு
/
'பரம்பொருள் தன்னையே பல பாகங்களாக பிரிக்கிறது'; சுவாமி சுத்தானந்த கிரி சொற்பொழிவு
'பரம்பொருள் தன்னையே பல பாகங்களாக பிரிக்கிறது'; சுவாமி சுத்தானந்த கிரி சொற்பொழிவு
'பரம்பொருள் தன்னையே பல பாகங்களாக பிரிக்கிறது'; சுவாமி சுத்தானந்த கிரி சொற்பொழிவு
ADDED : மார் 16, 2025 07:34 AM

புதுச்சேரி; 'பரம்பொருள் தன்னையே பல பாகங்களாக பிரிக்கிறது. அது தான் இறைவனின் படைப்பாற்றல் லீலை என சுவாமி சுத்தானந்த கிரி சொற்பொழிவாற்றினார்.
மகான் பரமஹம்ஸ யோகானந்தர் கடந்த 1917ல் ஏற்படுத்திய யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா எனும் ஒய்.எஸ்.எஸ்., அமைப்பு தியானங்கள், ஆன்மிக சொற்பொழிவு மூலம் கிரியா யோகாவை உலக அளவில் கொண்டு செல்கிறது.
இந்த அமைப்பின் சார்பில் புதுச்சேரியில் இருநாள் ஆன்மிக சொற்பொழிவு, தியான சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று புதுச்சேரி ஓட்டல் சற்குருவில் கிரியா யோக தியானம் குறித்த சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
மூத்த சன்னியாசி சுவாமி சுத்தானந்த கிரி சொற்பொழிவாற்றினார்.
உலகில் நாம் ஏன் படைக்கப்பட்டோம், நமது பிறப்பின் நோக்கம் என்ன, எப்படி படைக்கப்பட்டோம், எவ்வாறு இந்த பிரபஞ்சம் இயங்குகிறது என ஆயிரம் கேள்விகள் மனதில் அலைமோதும். இந்த தேடல்களுக்கு சரியான பதில் கிடைக்காது.
இந்த கேள்விகள் நம்முடைய ரிஷிகள், ஞானிகளுக்கும் மனதிலும் எழுந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பதிலை தேடினர். அதன் மீது பல ஆராய்ச்சி செய்து, தீர்வை கண்டுபிடித்தனர். அவர்களுக்கு கிடைத்த பதில்களை சீடர்களுக்கு சொல்லி கொடுத்து உலகிற்கு பரப்பினர். அதில் ஒன்று கிரியா யோகம் எனும் யோக விஞ்ஞான வழி.
இந்த வழிமுறையில் நான் யார் என்ற கேள்விக்கு அனுபவ மூலமாகவே விடை கிடைக்கும். நான் ஒன்றாகவே இருந்தேன். ஆனால் என்னையே பலவாக ஆக்கி கொண்டேன்.
இது தான் உயிர்கள் படைக்கப்பட்ட தத்துவம். பரம்பொருள் ஒன்று தான். அது தன்னையே பல பாகங்களாக பிரிக்கிறது. அது தான் இறைவனின் படைப்பாற்றல் லீலை.
பேச்சினால் மட்டும் கிடைப்பதில்லை ஞானம். அனுபவம் ரீதியாக பேரின்பம் காணுவதே ஞானம். இதையே கிரியா யோக விஞ்ஞான கலை பிரதிபலிக்கிறது.
கிரியா ஆன்மிக பாதையில் நீங்கள் படிப்படியாக பயணிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும். தியானம் விஞ்ஞானப்பூர்வமாக பயிற்சி செய்யும்போது மனம், சுவாசம், இதயம் ஆகியவற்றை அமைதிப்படுத்தி, உங்களுடைய சக்திகளை உள்ளே எடுத்து சென்று அங்கே பேரின்பத்துடன் உங்களுடைய ஆன்மாவின் ஐக்கியத்தை உணர முடியும்.
இவ்வாறு அவர் சொற்பொழிவாற்றினர்.
இரண்டாம் நாளான இன்று ரெட்டியார்பாளையம், அஜீஸ் நகரில் அமைந்துள்ள ஜோதி வாசம் எனும் இடத்தில், ஒருநாள் தியான வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 8:00 முதல் மாலை 6:30 மணி வரை நடக்கும் இந்த வகுப்பில் சத்சங்கம், தியான பயிற்சி அளிக்கப்படும்.