/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு 7ம் தேதிக்கு தள்ளி போகிறது
/
புதிய அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு 7ம் தேதிக்கு தள்ளி போகிறது
புதிய அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு 7ம் தேதிக்கு தள்ளி போகிறது
புதிய அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு 7ம் தேதிக்கு தள்ளி போகிறது
ADDED : ஜூலை 02, 2025 07:13 AM
புதுச்சேரி : புதிய அமைச்சர், நியமன எம்.எல்.ஏ., பதவியேற்பு விழா 7 ம் தேதிக்கு தள்ளி போகிறது.
புதுச்சேரி என்.ஆர்.காங்., கூட்டணி அரசில் அங்கம் வகித்த பா.ஜ., அமைச்சர் சாய்சரவணன்குமார், நியமன எம்.எல்.ஏக்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கடந்த 27 ம்தேதி தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
புதிய அமைச்சராக ஜான்குமார், நியமன எம்.எல்.ஏ.,க்களாக செல்வம், தீப்பாய்ந்தான், ராஜசேகர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜான்குமார் அமைச்சர் நியமனம் தொடர்பாக கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திலும், நியமன எம்.எல்.எல்., தொடர்பான கோப்பு பிரதமர் அலுவலகம் ஜனாதிபதி அலுவலகத்திலும் கடந்த நான்கு நாட்களாக ஒப்புதலுக்காக காத்திருக்கின்றது.
நேற்றும் இவர்களது நியமன கோப்பிற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. எனவே இன்று 2ம் தேதி நடக்க இருந்த புதிய அமைச்சர், நியமன எம்.எல்.ஏ., பதவி தள்ளி போகின்றது.அப்படியே இன்று அமைச்சர், நியமன எம்.எல்.ஏக்கள் நியமன கோப்புகளுக்கு ஒப்புதல் கிடைத்தாலும் உடனடியாக பதவியேற்பு விழாவும் நடத்த வாய்ப்பில்லை. நாளை 3ம் தேதி அஷ்டமி, 4ம் தேதி நவமி, 5 ம் தேதி தசமி, 6 ம் தேதி ஏகாதசி அடுத்தடுத்து வருகின்றது.
இந்நாட்களில் பதவியேற்பு விழா நடத்த விரும்பமாட்டார்கள். இந்த நாட்களை விட்டால், 7 ம் தேதி துவாதசி திதியுடன் முகூர்ந்த நாள் வருகின்றது. எனவே அன்றைய தினம புதிய அமைச்சர், நியமன எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழாவினை தடபுடலாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.