/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டாடா ஏசின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு
/
டாடா ஏசின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு
ADDED : மார் 15, 2024 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கடலுாரில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு இரு பைக்குகளை ஏற்றிக் கொண்டு டாடா ஏஸ் வாகனம் ஒன்று புதுச்சேரி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
கன்னிக்கோவில் அடுத்த கந்தன்பேட் அருகே சென்ற போது, வாகனத்தின் இடது பின்புற சக்கரம் கழன்றி சாலையில் உருண்டு ஓடியது. அதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் உராய்ந்த படி சென்று நின்றது. இதனால் பரபரப்பு நிலவியது.

