/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணி நிரந்தரம் செய்யக்கோரி மழையில் காத்திருந்த ஆசிரியர்கள்
/
பணி நிரந்தரம் செய்யக்கோரி மழையில் காத்திருந்த ஆசிரியர்கள்
பணி நிரந்தரம் செய்யக்கோரி மழையில் காத்திருந்த ஆசிரியர்கள்
பணி நிரந்தரம் செய்யக்கோரி மழையில் காத்திருந்த ஆசிரியர்கள்
ADDED : அக் 16, 2024 05:22 AM

புதுச்சேரி : பணி நிரந்தரம் செய்யக்கோரி முதல்வரை சந்திக்க கொட்டும் மழையில் காத்திருந்த ஆசிரியர்களிடம் எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுச்சேரியில் பட்டதாரி ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், பால சேவிகா பணியாளர்கள் உள்ளிட்ட 288 பேர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் பணி நிரத்தம் செய்ய வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு சென்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, நேற்று காலை சட்டசபை எதிரே கொட்டும் மழையில் பணி நிரந்தரம் செய்யகோரி முதல்வரை சந்திக்க ஆசிரியர்கள் காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா, சம்பத் எம்.எல்.ஏ., ஆகியோர் ஆசிரியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர், போலீஸ் அனுமதியுடன் முதல்வர் ரங்கசாமியை சந்திக்க சட்டசபைக்குள் அழைத்து சென்றனர். அங்கு, முதல்வர் ரங்கசாமி உடனடியாக பணி நிரந்தரம் செய்ய முடியாது.
அரசு கொள்கை முடிவு எடுத்து தான் நடவடிக்கை எடுக்க முடியும் என, தெரிவித்தார். இதையடுத்து, ஆசிரியர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.