/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
/
கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
ADDED : செப் 28, 2024 06:50 AM

வில்லியனுார் : வில்லியனுார் அருகே மாரியம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் அருகே உள்ள உளவாய்க்கால் கிராமத்தில் முத்தாலவாழி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் சங்கர் குருக்கள்,பூஜை செய்துவிட்டு இரவு 9:00 மணிக்கு மேல் கோவிலை பூட்டிச் செல்வது வழக்கம். நேற்று முன்தினமும் வழக்கம் போல் இரவு பூஜை முடித்துவிட்டு, கோவில் நடைசாத்திவிட்டு சென்றார். நேற்று காலை கோவில் நடை திறக்க வந்தபோது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம், உள் பிரகாரத்தில் முருகர் சன்னதியில் இருந்த வேலும் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் புகாரின் பேரில் வில்லியனுார் சப் -இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.