/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தலைமை செயலக அதிகாரி வீட்டில் வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு
/
தலைமை செயலக அதிகாரி வீட்டில் வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு
தலைமை செயலக அதிகாரி வீட்டில் வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு
தலைமை செயலக அதிகாரி வீட்டில் வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு
ADDED : அக் 25, 2024 05:58 AM
புதுச்சேரி: தலைமை செயலக கண்காணிப்பாளர் வீட்டின் கதவை உடைத்து, பணம், வெள்ளி பொருட்கள் திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டை அரசு குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்டாலின், 53; தலைமை செயலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ஸ்டாலின் வழக்கம் போல் வேலைக்கும், அவரது மனைவி அனிதா தீபாவளி பொருட்கள் வாங்க கடை வீதிக்கும் சென்றுள்ளனர். பின்னர், வேலை முடிந்து ஸ்டாலின் இரவு 7:15 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது வீட்டின் முன்பக்க கதவை திறக்க முயன்றபோது, தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அருகிருந்த 2 வெள்ளி கொலுசுகள், ரூ. 15 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது.
ஸ்டாலின் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.