/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'இந்து அறநிலையத்துறையை கலைக்கும் நேரம் வந்துவிட்டது' புதுச்சேரியில் அண்ணாமலை ஆவேசம்
/
'இந்து அறநிலையத்துறையை கலைக்கும் நேரம் வந்துவிட்டது' புதுச்சேரியில் அண்ணாமலை ஆவேசம்
'இந்து அறநிலையத்துறையை கலைக்கும் நேரம் வந்துவிட்டது' புதுச்சேரியில் அண்ணாமலை ஆவேசம்
'இந்து அறநிலையத்துறையை கலைக்கும் நேரம் வந்துவிட்டது' புதுச்சேரியில் அண்ணாமலை ஆவேசம்
ADDED : டிச 17, 2025 05:19 AM
புதுச்சேரி: புதுச்சேரி இந்து முன்னணி சார்பில் தீபம் ஏற்றும்போராட்டம் சுதேசி மில் அருகே நேற்று நடந்தது.
சிதம்பரேஸ்வர் திருமடத்தின் கணேசன், மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., தலைவர் அவிந்தன், இந்து முன்னணி தலைவர் சணில்குமார், பா.ஜ., மாநிலத் தலைவர் ராமலிங்கம், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், செல்வம், தொழிலதிபர் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்று, பேசியதாவது: திருப்பரங்குற்றத்தில் தீபம் ஏற்றவேண்டும் என, தீர்ப்பளித்த நீதபதி சாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, 120 எம்.பி.,கள் கையெழுத்திட்டு பாராளுமன்றத்தில் கொடுத்துள்ளனர்.
இதில் புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கம் கையெழுத்து போட்டுள்ளார்.
இது இந்துமக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. வரும் தேர்தலில் இருவருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
தீபத்துாணில் தீபம் ஏற்றவேண்டும் என, கேட்ட இடத்தில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் எந்த பிரச்னையும் இல்லை.
தீர்ப்புக்கு பின் டிசம்பர் 1ம் தேதி அப்பீலுக்கு போகவில்லை. ஆனால் 2ம் தேதி அப்பீலுக்கு போனவர் இந்து அறநிலையத்துறை செயலாளர். எதற்கு இந்துறை அறநிலையத் துறையை வைத்துள்ளீர்கள். எனவே ஆர்.எஸ்.எஸ்., போன்ற இயக்கங்கள் சொல்வது போல் இந்து அறநிலையத்துறை கலைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.
விஜய் வந்துவிட்டதால் சிறுபான்மையினர் ஓட்டு அவருக்கு சென்றுவிடும் என்ற அச்சத்தில் இருப்பதால் இது போன்ற நாடகமாடி சிறுபான்மையினரின் 100 சதவீத ஓட்டு பெறவே த இதை செய்கின்றனர்.
இதற்காக ஏன் இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துகின்றீர்கள். எனவே வரும் தேர்தலில் புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்' என்றார்.

