/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விஷவாயு தாக்கி இறந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்காத சோகம்
/
விஷவாயு தாக்கி இறந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்காத சோகம்
விஷவாயு தாக்கி இறந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்காத சோகம்
விஷவாயு தாக்கி இறந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்காத சோகம்
ADDED : டிச 01, 2024 04:17 AM
புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் புதுநகர், 4வது குறுக்கு தெருவில் ஜூன் 11ம் தேதி, பாதாள சாக்கடை மேன்ஹோல்களில் உருவான விஷவாயு, கழிப்பறை வழியாக வெளியேறியது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகள் செல்வராணி, 15; காமாட்சி, 45; செந்தாமரை, 80; உயிரிழந்தனர்.
விஷவாயு தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 30 லட்சம், மற்ற இரு பெண்கள் குடும்பத்திற்கும் தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
நிவாரணம் அறிவித்து 5 மாதம் கடந்தும் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு, நிவாரண தொகை கிடைக்கவில்லை.
உயிரிழந்த செல்வராணியின் தந்தை ஆரோக்கியதாஸ் கடந்த ஜூலை 28ம் தேதி மாயமானார். மூவருக்கும் நிவாரணம் தொகை அளிக்க கோப்புகள் தயாராக இருந்தாலும், ஆரோக்கியதாஸ் மாயமானதால் நிவாரண தொகையை ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
ஒரு வழியாக செல்வராணியின் சகோதரரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். ஆனால் வாரிசு சான்றிதழ் பெருவதில் கால தாமதம் ஏற்பட்டு வருவதால் ஒட்டுமொத்தமாக 3 குடும்பத்தினருக்கான நிவாரண தொகை கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.