/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க மத்திய அமைச்சர் புதுச்சேரி வருகிறார்

ADDED : டிச 21, 2024 06:07 AM

புதுச்சேரி: புதுடில்லியில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் துறை இணை அமைச்சர் பகிரத் சவுத்ரியை அசோக் பாபு எம்.எல்.ஏ., அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது பெஞ்சல் புயலால் விளைநிலங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பற்றி விவரித்தார். மாநிலத்தில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் சேதம் அடைந்ததுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு பெய்த கன மழை காரணமாக நெல், கரும்பு, வாழை மற்றும் காய்கறிகள் முற்றிலுமாக நீரில் மூழ்கி பாதிப்படைந்தது. கால்நடைகளும் பாதித்தன என, எடுத்துரைத்தார்.
பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக புதுச்சேரிக்கு மத்திய இணை அமைச்சர் வருகை தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அழைப்பினை ஏற்ற மத்திய இணை அமைச்சர், ஜனவரி மாதத்தில் புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை புரிவதாகவும்; பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்பதாகவும் உறுதி அளித்தார்.
புதுச்சேரி மழை பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைத்து நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்தார்.