sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓங்கி ஒலித்த விசில்:

ஓங்கி ஒலித்த விசில்:

ஓங்கி ஒலித்த விசில்:


UPDATED : மே 04, 2026 09:53 PM

ADDED : மே 04, 2026 09:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 04, 2026 09:53 PM ADDED : மே 04, 2026 09:30 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஓங்கி ஒலித்த விசில்:

மணவெளி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட சபாநாயகர் செல்வம், காங்., அனந்தராமன், த.வெ.க., ராமு ஆகியேரிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் துவக்கத்தில் இருந்தே 5 சுற்றுகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த த.வெ.க., வேட்பாளர் ராமு, சபாநாயகர் செல்வத்தைவிட 3,093 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

எதிர்க்கட்சி தலைவர் தோல்வி:

வில்லியனுார் தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வான தி.மு.க., மாநில அமைப்பாளரான சிவா, எதிர்க்கட்சி தலைவர் பதவியை பிடித்தார். அவரே இந்த தேர்தலில் அதே வில்லியனுார் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, அரசு ஊழியரான ரவிக்குமார், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, என்.ஆர்.காங்., சார்பில் போட்டியிட்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் முதல் சுற்றிலேயே ரவிக்குமார் 844 ஓட்டுகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்ததால், பரபரப்பு நிலவியது. அடுத்த சுற்றில் சிவா, ரவிக்குமாரை விட 1,555 ஓட்டுகள் கூடுதலாக அதாவது 3,791 ஓட்டுகள் பெற்று முன்னிலை பிடித்தார். இனி சிவா முன்னிலை வகிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அடுத்த மூன்று சுற்றுகளிலும் ரவிக்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து 16,970 ஓட்டுகள் பெற்று 1,970 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us