/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாய்க்காலில் விழுந்த வீட்டின் கட்டடம் அகற்றும் பணி துவக்கம்; மீண்டும் வீடு கட்ட ஏற்பாடு

ADDED : பிப் 15, 2024 05:44 AM

புதுச்சேரி : உப்பனாறு வாய்க்காலில் இடிந்து விழுந்த வீட்டின் கட்டட இடிபாடுகள் இடித்து அகற்றும் பணி துவங்கியது.
உப்பனாறு வாய்க்கால் கரை பலப்படுத்தும் பணிக்காக கரையோரம் பள்ளம் தோண்டு பணி நடந்து வருகிறது. இந்த கரையோரம் ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகர் சாவித்ரி என்பவர் 300 சதுரடி அடியில் 2 அடுக்கு வீடு கட்டி இருந்தார். கடந்த 22ம் தேதி, சாவித்ரியின் வீடு உப்பனாறு பக்கமாக சாய்ந்து விழுந்து நொருங்கியது.
வீடு இழந்த குடும்பத்திற்கு உதவி செய்வதாக முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து, வாய்க்காலில் இடிந்து விழுந்து கிடந்த வீட்டின் இடிபாடுகளை பொதுப்பணித்துறை ஒப்பந்தாரர்கள் மூலம் இடித்து அகற்றும் பணி நடக்கிறது. வீடு இடிந்துவிழுந்த அதே இடத்தில் மீண்டும் புதிய வீடு கட்டப்பட உள்ளது குறிப்பிடதக்கது.