/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்காஞ்சி ஆற்றங்கரைப் பகுதியில் படித்துறை அமைக்கும் பணி துவக்கம்

ADDED : பிப் 04, 2024 03:19 AM

வில்லியனுார் : திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரை பகுதியில் படித்துறை அமைப்பதற்கான பணியை வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
திருக்காஞ்சியில் பழமைவாய்ந்த கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மக திருவிழாவின்போது சங்கராபரணி ஆற்றில் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
கோவிலுக்கு வலது கரையில் சங்கராபரணி ஆற்றின் கரையோரம் பழமை வாய்ந்த படித்துறை பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில், ரூ. 3.10 கோடி செலவில் 75 மீட்டார் நீளம், 26.10 மீட்டர் அகலத்துடள் புதிய படித்துறை, ஆற்றின் நீர் போக்குவரை கருங்கல் படிக்கட்டுகள், அதன் மீது சில்வர் கைப்பிடிகள்,கோபுரத்துடன் கூடிய நான்கு தனி பார்வையாளர் மடம் உள்ளிட்ட பணிகள் செய்வற்குநேற்று பூமி பூஜை விழா நடந்தது,
வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் செல்வராசு, இளநிலை பொறியாளர் ஸ்ரீநாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.