/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
/
மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
ADDED : நவ 04, 2024 05:35 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் தங்கி வேலை செய்து வந்த கட்டட தொழிலாளி வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.
விருத்தாசலம், சின்ன பண்டாரக்குப்பத்தை சேர்ந்தவர் பரமானந்தம், 23; கட்டட தொழிலாளி. புதுச்சேரி செயிண்ட்பால்பேட், மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள கட்டட மேஸ்திரி சிவசங்கர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.இவருடன் புதுச்சேரியை சேர்ந்த இஸ்மாயில், சதீஷ், கடலுாரை சேர்ந்த சுகுமார், ரமேஷ், வெங்கட், சாரதி, கண்ணன் ஆகியோரும் தங்கி வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், பரமானந்தம் கடந்த 28 ம் தேதி வீட்டு மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து காயமடைந்தார். ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை பாவாடை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.