நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: வில்லியனுாரில் துணிக்கடைக்கு வேலைக்கு சென்றஇளம்பெண் காணாமல் போனதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரிக்கலாம்பாக்கம் அடுத்த கோர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் தணிகாசலம் மகள் ராகவி, 24; வில்லியனுாரில்உள்ள துணிக் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 20ம் தேதி காலை வழக்கம்போல் தணிகாசலம் தனது மகளை வில்லியனுாரில் வேலை செய்யும் துணிக்கடை பகுதியில் இறக்கிவிட்டு சென்றார்.
வேலைக்கு சென்ற ராகவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து தணிகாசலம் கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

