/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தாலம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
/
முத்தாலம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED : ஜன 13, 2026 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நாளை அதிகாலை நடக்கிறது.
பண்டசோழநல்லுார் கிராமத்தில் பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் போகிப்பண்டிகை தோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை போகிப்பண்டிகையை முன்னிட்டு இக்கோவிலில் அதிகாலை 5.00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது.
தீமிதி திருவிழாவில் பண்டசோழநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

