
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தை மாத அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் கோவில்களிலும், நீர் நிலைகளிலும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டிநேற்று புதுச்சேரி கடற்கரையில்சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது.சுப்ரமணியர் மணக்குள விநாயகர், கவுசிக பாலசுப்ரமணியர், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள், சிறப்பு அலங்காரத்துடன் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.

