/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கைரேகை பதிவுகளை திருடி மோசடி: தடுப்பதற்கு வழிகாட்டுதல் வெளியீடு
/
கைரேகை பதிவுகளை திருடி மோசடி: தடுப்பதற்கு வழிகாட்டுதல் வெளியீடு
கைரேகை பதிவுகளை திருடி மோசடி: தடுப்பதற்கு வழிகாட்டுதல் வெளியீடு
கைரேகை பதிவுகளை திருடி மோசடி: தடுப்பதற்கு வழிகாட்டுதல் வெளியீடு
ADDED : ஜன 07, 2024 05:03 AM
புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை, விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவித்தொகைள் வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முதியோர்கள் வங்கிக்கு சென்று சலான் நிரப்பி எடுப்பது சிரமம்.
இதனால், வங்கிகளில் ஆதார் செயல்படுத்தப்பட்ட பணம் எடுக்கும் முறை (ஆதார் எனேபிள் பேமென்ட் சிஸ்டம் ) உள்ளது. இந்த முறையில் பணம் எடுக்க ஏ.டி.எம்., கார்டு, வங்கி புத்தகம், ஆதார் எண், ஓ.டி.பி. தேவையில்லை. சிறிய ரேடியோ போன்ற வடிவில் இருக்கும்.
ஆதார் எனேபிள் பேமென்ட் சிஸ்டம் கருவியில் கைரேகையை பதிவு செய்தால், அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம்.
கிராமப்புறங்களில் இன்றும் இந்த முறையில் முதியோர், விதவை உள்ளிட்டோருக்கு வங்கியில் இருந்து பணம் எடுத்து தரப்படுகிறது.தற்போது இணைய வழி மோசடி கும்பல் கடந்த 4 நாட்களில், புதுச்சேரியைச் சேர்ந்த 62 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து, ஆதார் எனேபிள் பேமென்ட் சிஸ்டம் மூலம் பணம் திருடி உள்ளனர்.பொதுமக்கள் சிம்கார்டு வாங்கும்போது, ஆதார் கார்டை புதுப்பிக்கும்போது, சொத்து வாங்க, விற்கும்போது பத்திர பதிவு அலுவலகத்தில் கைரேகை பதிவுகளை பயன்படுத்துவர். அந்த கைரேகை பதிவுகளை, அதே போன்ற கைரேகையை சிலிக்கான் பதிவு மூலம் பிரதி எடுத்து, ஒ.டி.பி., இன்றி வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கின்றனர்.இந்த முறையில் பணம் எடுப்பதை தடுக்கும் முறையை சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ளனர். முதலில் கூகுளில் https://uidai.gov.in என்ற லிங்கை டைப் செய்து உள்ளே சென்றவுடன் ஆதார் எண் மற்றும் ஒ.டி.பி. பதிவிட வேண்டும்.லாக் மற்றும் அன்லாக் பயோமெட்ரிக் என தெரியும். அதற்கு ஒ.கே., கிளிக் செய்ய வேண்டும். இந்த உத்தரவு கொடுத்தவுடன் லாக் அண்டு அன்லாக் என இரண்டு ஆப்ஷன் கேட்கும். அதில் லாக் பயோமெட்ரிக் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து தங்கள் ஆதார் கைரேகை விபரங்களை லாக் செய்து கொள்ளவும்.இவ்வாறு செய்தால், நமக்கு தெரியாமல் நம் ஆதார் தகவலை பயன்படுத்தி வங்கி கணக்கில் பணம் திருடுவதை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.