/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை சுகாதார நிலையத்தில் திருட்டு
/
துணை சுகாதார நிலையத்தில் திருட்டு
ADDED : நவ 11, 2024 07:26 AM
திருபுவனை: திருவாண்டார்கோயில் அரசு துணை சுகாதார மையத்தில் கதவை உடைத்து எலக்ட்ரானிக் மற்றும் மருத்துவ உபகரணங்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி திருபுவனை அடுத்த திருவாண்டார்கோயில் மெயின்ரோட்டில் அரசு துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து கடந்த 4ம் தேதி டாக்டர் மற்றும் ஊழியர்கள் சென்ற போது சுகாதார நிலையத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது .
உள்ளே சென்று பார்த்தபோது கம்ப்யூட்டர் சி.பி.யூ., ஹெட் போன், கீ போர்டு, ரத்த அழுத்த பரிசோதனை கருவி மற்றும் பல்ஸ் ஆக்சிமீட்டர் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து டாக்டர் ஷீலாபிரியதர்ஷினி கொடுத்த புகாரின்பேரில் திருபுவனை போலீஸ் சீனியர் கிரேடு சப் இன்ஸ்பெக்டர் ராஜீவ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.