தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின் சாதனம் திருட்டு; 2 பேர் கைது 

மின் சாதனம் திருட்டு; 2 பேர் கைது 

மின் சாதனம் திருட்டு; 2 பேர் கைது 


ADDED : செப் 24, 2024 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2024 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ஏனாம் பிராந்தியம் அடவிபோலம் பகுதியில் தனியார் சொசைட்டி அமைந்துள்ளது. இதன் தலைவராக ஸ ரீனு உள்ளார்.

இந்நிலையில் தனியார் சொசைட்டியில் இருந்த மின்சாதன பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் ஏனாம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏனாம் புதிய பஸ் நிலையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேக நபர்கள் இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஏனாம் தரியாலடிப்பா பகுதியைச் சேர்ந்த என்டபள்ளி ஸ் ரீனு 27; மற்றும் மாமிடிசநாதிபாகுமார் 36; என்பதும், அவர்கள் தனியார் சொசைட்டில் உள்ள மின்சாதன பொருட்களை திருடிய இதையும் ஒப்புக் கொண்டனர்.

இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us