/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிதி நிறுவனத்தில் பணம் திருட்டு
/
நிதி நிறுவனத்தில் பணம் திருட்டு
ADDED : ஏப் 21, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தனியார் நிதி நிறுவனத்தில் புகுந்து பணம் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி நுாறடி சாலை, எல்லப்பிள்ளைச்சாவடியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. நேற்று முன்தினம் மர்ம நபர் நிதி நிறுவனத்திற்கு உள்ளே வந்து. அறையில் ஊழியர் இல்லாத நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, டிராவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி அங்கிருந்து தப்பி சென்றார்.
நிறுவனத்தின் ஊழியர் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, நிறுவனத்தில் இருந்த சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.