ADDED : ஜூன் 24, 2026 02:47 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஏம்பலத்தில் கோவில் உண்டியல் உடைத்து காணிக்கையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏம்பலம் கிராமத்தில் சிவசுப்பரமணியர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் காணிக்கையை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாக தலைவர் ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
