/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுவாமி சிலைகளில் தாலி செயின் திருட்டு
/
சுவாமி சிலைகளில் தாலி செயின் திருட்டு
ADDED : நவ 19, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கோவிலில் சுவாமி சிலைகளில் இருந்த தாலி செயினை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் சாலை, ரயில்வே கேட் அருகே ரோடியார்பேட்டில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. அரியாங்குப்பத்தை சேர்ந்த அர்ச்சகர் மணிவண்ணன், நேற்று முன்தினம் காலை 6:00 மணியளவில் கோவிலுக்கு சென்றார்.
கோவில் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, மூன்று சாமி சிலைகளில் இருந்த ஐம்பொன்னாலான, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தாலி செயின் காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தாலி செயினை திருடி சென்ற நபரை தேடி வருகின்றனர்.

