/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தென்றல் நகர் வாய்க்காலை துார் வார எம்.பி., உத்தரவு
/
தென்றல் நகர் வாய்க்காலை துார் வார எம்.பி., உத்தரவு
தென்றல் நகர் வாய்க்காலை துார் வார எம்.பி., உத்தரவு
தென்றல் நகர் வாய்க்காலை துார் வார எம்.பி., உத்தரவு
ADDED : நவ 22, 2025 06:02 AM

புதுச்சேரி: தென்றல் நகர் பகுதியில் உள்ள வாய்க்காலை பார்வையிட்ட வைத்திலிங்கம் எம்.பி., அதனை உடனடியாக துார்வார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
காமராஜர் நகர் தொகுதி, தென்றல் நகரில் அமைந்துள்ள கழிவுநீர் வாய்க்கால் கடந்த சில ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளது.
இதனால், மழைக் காலங்களில் தண்ணீர் வீடுகளில் புகுந்து, பொருட்கள் சேதமடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, வைத்திலிங்கம் எம்.பி., பொதுப்பணித்துறை மற்றும் உழவர்கரை நகராட்சி அதிகாரிகளுடன் நேற்று தென்றல் நகரில் உள்ள கழிவுநீர் வாய்க்காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அதிகாரிகளிடம் உடனே வாய்காலை துார்வார நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
காங்., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், சட்டசபை தேர்தல் தலைமை பொறுப்பாளர் மருதுபாண்டியன், பொறுப்பாளர் பரணி, லட்சுமணன், சேதுராமன், ராஜசேகர், பிரதாப், நாராயணன், நாராயணசாமி, சுமதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

