தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருக்காமீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்

திருக்காமீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்

திருக்காமீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்


ADDED : ஜூன் 11, 2025 07:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2025 07:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்; கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவத்தில் நேற்று முன்தினம் இரவு தெப்பல் உற்சவம் நடந்தது.

வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து 13 நாட்கள் நடைபெற்ற விழாவில், கடந்த 3ம் தேதி பரிவேட்டை, 5ம் தேதி 63 நாயன்மார்களுடன் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, 7ம் தேதி இரவு திருக்கல்யாணம், 8ம் தேதி தேர் திருவிழா நடந்தது.

நேற்று முன்தினம் இரவு தெப்பல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி மாலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து மின் அலங்காரத்தில் சுவாமி தெப்பல் உற்சவம் நடந்தது. முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

விழா ஏற்பாடுகளை வெற்றிலை மட சிறப்பு அதிகாரி மாணிக்கவேல் மற்றும் துளுவ வேளாளர் மரபினர் செய்திருந்தனர். நேற்று இரவு முத்துப்பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று (11ம் தேதி) விடையாற்றி உற்சவமும், நாளை 12ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us