/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'திருப்பாவை 18ம் பாசுரத்தில் எப்போதும் ஒரு ஏற்றம் உண்டு' ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

ADDED : ஜன 04, 2024 03:05 AM
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் மார்கழி மாதத்தையொட்டி திருப்பாவையின் 18ம் பாசுரம் குறித்து நேற்று உபன்யாசம் செய்ததாவது:
திருப்பாவையின் 18, 19, 20 ஆகிய மூன்று பாசுரங்களும் பிராட்டியாகிய மஹாலட்சுமி ஸ்வரூபமான நப்பின்னைப் பிராட்டியைக் குறித்த பாசுரங்களாகும்.
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், முதலில் ஆச்சார்யனையும் (குரு), பிறகு பகவான் அருளைப் பெறுவதற்கு பிராட்டியையும் வணங்கும் மரபைத் தான் பாசுரத்தின் உட்பொருளாக ஆண்டாள் சொல்கிறாள்.
இந்திரியங்களுக்கு அதிபதியான நீளா தேவியான நப்பின்னையைக் குறித்த இந்தப் பாசுரத்தில், ஐம்பொறிகளும் உணர்த்துவதை பாசுரச் சொற்களாள் ஆண்டாள் உணர்த்தியுள்ளாள்.
திருப்பாவையின் 18 வது பாசுரத்திற்கு எப்பொழுதுமே ஒரு ஏற்றம் உண்டு. ராமாயணத்தில் பால காண்டத்தில் 18 வது சர்கம் ராமனின் அவதாரம் பற்றியது. அயோத்யா காண்டத்தில் 18 வது சர்கம் கைகேயி வரத்தால் ராமன் கானகம் போவது குறித்தது.சுந்தர காண்டத்தில் 18 வது சர்கம் அசோக வனத்தில் ஹனுமான் சீதா பிராட்டியை பார்த்த விவரம். யுத்த காண்டத்தில் 18 வது சர்கம் விபீஷ்ண சரணாகதி. பாரதப் போர் 18 நாட்கள் நடந்தது.
பகவத் கீதையின் அத்தியாயங்கள் 18. பகவத் கீதையின் 18 வது அத்தியாயம் கீதோபதேசம். புரணங்கள் 18. சாஸ்தாவின் படிகள் 18. ஆடிப் பெருக்கு 18ம் நாள். ராமானுஜர் அஷ்ட்டாச்சர மந்திரம் பெற 18 முறை திருக்கோஷ்ட்டியூர் நம்பியிடம் சென்றார். 18ல் உள்ள எண்கள் 1ம் 8ம் கூட்டினல் 9. 9 வது திதி நவமி தான் ராமன் அவதரித்த திதி.இப்படி 18 க்கு நம் சாஸ்திரங்களில் பல ஏற்றங்கள் உண்டு.
இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.