sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஒப்பந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய சட்ட தடை ஏதும் இல்லை :அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கருத்து

/

 ஒப்பந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய சட்ட தடை ஏதும் இல்லை :அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கருத்து

 ஒப்பந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய சட்ட தடை ஏதும் இல்லை :அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கருத்து

 ஒப்பந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய சட்ட தடை ஏதும் இல்லை :அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கருத்து


ADDED : டிச 31, 2025 03:36 AM

Google News

ADDED : டிச 31, 2025 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஒப்பந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய சட்டப்படி எந்த தடையும் இல்லை என, அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவத் தலைவர் சேஷாச்சலம் கூறினார்.

இதுகுறித்து அவர், கூறியதாவது;

பள்ளிக்கல்வித் துறையில் 292 கவுர விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பால சேவிகாக்கள் 4 முதல் 6 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

அனைவரும் கடந்த 2020ம் ஆண்டு முதல் அந்தந்த பதவிகளில் ஆள்சேர்ப்பு விதிகளின்படி காலியாக உள்ள பதவிகளில் பணி அமர்த்தப்பட்டவர்கள், இடஒதுக்கீடு முறை, வயது வரம்பு, அனைவருக்குமான வாய்ப்பு என்ற அடிப்படையில் தேர்வு செய்து பணியமர்த்தப்பட்டவர்கள்.

அரசின் மற்ற துறை திட்டங்களில் ஒப்பந்த அடிப்டையில் பணிபுரிபவர்களை, பள்ளிகல்வித் துறையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு நடந்த வழக்கில், சட்டத்திற்கு புறம்பாக கொல்லப்புறமாக பணியில் அமர்த்தப்பட்டவர்களை தான் பணி நிரந்தரம் செய்யக்கூடாது என, கூறியுள்ளது. அதே நேரத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தில் உட்பட்டு, 'எல்லோருக்கும் சம வாய்ப்பு' இட ஒதுக்கீடு முறை, முறையான ஆள் சேர்ப்பு விதிகள், அடிப்படையில் தேர்வு செய்தவர்கள் தினக்கூலியாகவோ, ஒப்பந்த அடிப்படையிலோ, தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியமர்த்தி இருந்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய தடையில்லை என, கூறியுள்ளது. இதையே பின்னர் வந்த தீர்ப்புகளும் உறுதி செய்துள்ளனர்.

எனவே 292 ஒப்பந்த ஆசிரியர்களையும் பணி நிரந்தம் செய்வதற்கு சட்டப்படி தடை ஏதும் இல்லை, ஆட்சியாளர்களுக்கு மனம் இருந்தால் போதும்' என்றார்.






      Dinamalar
      Follow us