/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சபாநாயகர் அரசு விழாக்களில் பங்கேற்கலாம் என விதி இல்லை; அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு

ADDED : டிச 21, 2024 05:40 AM
புதுச்சேரி: சபாநாயகர் அரசு விழாக்களில் பங்கேற்கலாம் என்ற விதி ஏதும் இல்லை என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர், கூறியதாவது;
புதுச்சேரி சபாநாயகர் சட்டசபை மாண்புகளை மீறி செயல்படுகிறார். அரசு விழாக்களில் பங்கேற்ற அதிகாரிகளை கட்டாயப்படுத்துவது, எஸ்டிமேட் மற்றும் பொதுக்கணக்குழுக்கு தலைமை தாங்கி நடத்தியது வரம்பு மீறிய செயல் என, குற்றம்சாட்டி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நேரு எம்.எல்.ஏ., கடிதம் கொடுத்துள்ளார்.
கவர்னர், முதல்வர் பங்கேற்கும் விழாவில் சபாநாயகர் கலந்து கொள்ளலாம் என, யூனியன் பிரதேச சட்டம் 1963 பிசினஸ் ரூலில் இல்லை.
கவர்னர், முதல்வர் விழாவில் பங்கேற்கலாம் என்ற விதி ஆதாரத்தை சபாநாயகர் தெரிவிக்க வேண்டும். சபாநாயகர் அதிகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என, கூறுவது ஆணவத்தின் உச்சகட்டம்.
பல மாநில சபாநாயகர்களின் தவறான தீர்ப்புகளை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் கண்டித்து நியாயமான மாற்று தீர்ப்புகளை வழங்கி உள்ளது. உத்தரகாண்டில் காங்., ஆட்சி கவிழ்ந்தபோது, சபாநாயகரின் தவறான செயலை கண்டித்து தொடுக்கப்பட்ட வழக்கில் காங்., மீண்டும் ஆட்சி அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதல்வர் அழைத்ததின் பேரில் அவரது அலுவலகம் சென்றதாக சபாநாயகர் கூறியுள்ளதை முதல்வர் தெரிவிக்க வேண்டும் என, கூறினார்.