தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீயணைப்பு வாகனங்கள் செல்ல வழியே இல்லை.... பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்த அவலம்  புதுச்சேரி வீதிகளின் ஆக்கிரமிப்புகளுக்கு முடிவு எப்போது?

தீயணைப்பு வாகனங்கள் செல்ல வழியே இல்லை.... பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்த அவலம்  புதுச்சேரி வீதிகளின் ஆக்கிரமிப்புகளுக்கு முடிவு எப்போது?

தீயணைப்பு வாகனங்கள் செல்ல வழியே இல்லை.... பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்த அவலம்  புதுச்சேரி வீதிகளின் ஆக்கிரமிப்புகளுக்கு முடிவு எப்போது?


UPDATED : ஆக 23, 2026 11:26 PM

ADDED : ஆக 23, 2026 10:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2026 11:26 PM ADDED : ஆக 23, 2026 10:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வீதிகளில் நுழைய முடியாமல், நள்ளிரவில் தீயணைப்பு வீரர்கள் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து தீயை அணைத்த சம்பவம், ஒட்டுமொத்த நகர திட்டமிடலையும், பொதுமக்களின் பொறுப்பற்ற தனத்தையும் உலுக்கி எடுத்து எச்சரிக்கை மணி எழுப்பியுள்ளது.

புதுச்சேரி குயவர்பாளையம், லெனின் வீதி அருகே உள்ள டி.ஆர். நகர் மெயின் ரோட்டின் காலி மனையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு குப்பை மேடு ஒன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குப் பாய்ச்சலாகப் புறப்பட்டு வந்த புதுச்சேரி தீயணைப்புத் துறையினருக்கு காத்துக்கொண்டிருந்தது மாபெரும் அதிர்ச்சி.

தீ விபத்து நடந்த டி.ஆர். நகர் பகுதிக்குச் செல்லும் குறுகிய சந்தில் தீயணைப்பு வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியாதவாறு, சாலை முழுவதையும் ஆக்கிரமித்து கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் டாட்டா ஏஸ் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்தன. இது போதாதென்று, சாலையில் மூடப்படாமல் ஆபத்தாக துருத்திக்கொண்டிருந்த குடிநீர் குழாய்களும் தீயணைப்பு வாகனத்தின் பாதையை முற்றிலுமாக மறித்தன.

வாகனத்தை உள்ளே கொண்டு செல்ல முடியாத சூழலில், லெனின் வீதியிலேயே வாகனத்தை நிறுத்திய தீயணைப்பு வீரர்கள் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு ஓடிச்சென்று, பிளாஸ்டிக் பக்கெட்களில் தண்ணீரைப் பிடித்து ஊற்றி, ஒருவழியாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த சம்பவம் புதுச்சேரி நகர வீதிகளை பற்றி எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளது. இன்று எரிந்தது வெறும் குப்பை மேடுதான். அதனால் பக்கெட் தண்ணீரில் தீ அணைக்கப்பட்டுப் பேரழிவு தவிர்க்கப்பட்டது. ஆனால், நாளை ஒரு அடுக்குமாடி குடியிருப்போ அல்லது வணிக வளாகமோ தீப்பற்றி எரிந்தால், அப்போதும் பக்கெட்டில் தண்ணீர் பிடித்துதான் அணைக்க முடியுமா என்பதை அனைவருமே யோசிக்க வேண்டும்.

குறுகிய தெருக்களில் முறையற்ற ஆக்கிரமிப்புகளையும், ஆபத்தான குடிநீர் குழாய் அமைப்புகளையும் கண்டுகொள்ளாமல் விட்டுள்ள நிர்வாகத்தின் மீது கேள்விகள் எழுந்துள்ளது. பொதுமக்களும் தன் பொறுப்புணர்ந்து சிந்தித்துச் செயல்பட வேண்டும். கோடிக் கணக்கில் நவீன உபகரணங்கள் இருந்தும், அதை இயக்க வழிவிடாமல் முடக்கிப் போட்டிருப்பது யாருடைய தவறு.. அவசரகால வாகனங்கள் செல்லக்கூட வழியில்லாமல் பாதையை மறித்து வாகனங்களை நிறுத்தும் சுயநல மனப்பான்மைக்கு பொதுமக்களும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதுபோன்ற அலட்சியங்கள் நாளை பெரும் உயிர்பலிக்கு வழிவகுக்கும். அவசர கால மீட்புப் பணிகளுக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us