sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பண்டிகைகால இலவச அரிசி, சர்க்கரை வினியோகத்தில் அரசியல் கூடாது அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்

/

பண்டிகைகால இலவச அரிசி, சர்க்கரை வினியோகத்தில் அரசியல் கூடாது அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்

பண்டிகைகால இலவச அரிசி, சர்க்கரை வினியோகத்தில் அரசியல் கூடாது அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்

பண்டிகைகால இலவச அரிசி, சர்க்கரை வினியோகத்தில் அரசியல் கூடாது அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்


ADDED : அக் 24, 2024 06:13 AM

Google News

ADDED : அக் 24, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பண்டிகைக்கால இலவச அரிசி, சர்க்கரையை அரசியல் தலையீடு இன்றி வழங்க வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் 8 ஆண்டிற்கு பிறகு பணத்திற்கு பதில் அரிசி வழங்க நடவடிக்கை எடுத்த கவர்னருக்கு அ.தி.மு.க., சார்பில் பாராட்டுகளையும், முதல்வருக்கு நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

ரேஷன் கடைகளை உடனடியாக திறப்பதில் சிரமம் உள்ளதால், பண்டிகைக்கால இலவச அரிசி, சர்க்கரையை அங்கன்வாடிகளில் வழங்கேoண்டும். இதில், எவ்வித அரசியல் தலையீடு இன்றி, அதிகாரிகள் நேரடியாக வழங்க வேண்டும்.

உள்ளாட்சித் துறையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ரவிக்குமார் தனது வருமானத்திற்கு அதிகமாக 106.73 சதவீதம் சொத்து சேர்த்ததாக கடந்த 8 ம் தேதி சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ.,யை குறை கூறியது மட்டுமன்றி, ரூ. 106 கோடிக்கு சொத்து சேர்த்ததாக வழக்கம் போல் தவறான தகவலை கூறியுள்ளார்.

சி.பி.ஐ.,யினால் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது அரசு உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சி.பி.ஐ.,யால் குற்றம்சாட்டபட்டவர் மீது அரசு துறை ரீதியான நவடிக்கை எடுக்கவேண்டும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர் மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அட்டவணை இன மக்களுக்கு, கோர்ட் உத்தரவின்படி, தாய் வழியில் வசிப்பிடம் ஆதாரத்தை கருத்தில் கொள்ளலாமா? வேண்டாமா என அரசு முடிவெடுக்க சிறப்பு சட்டசபையை கூட்டி, அதில் நல்ல முடிவினை எடுத்து உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us