/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளாஸ்டிக் பொருள் மூட்டைகள் சாலையில் விழுந்ததால் பரபரப்பு
/
பிளாஸ்டிக் பொருள் மூட்டைகள் சாலையில் விழுந்ததால் பரபரப்பு
பிளாஸ்டிக் பொருள் மூட்டைகள் சாலையில் விழுந்ததால் பரபரப்பு
பிளாஸ்டிக் பொருள் மூட்டைகள் சாலையில் விழுந்ததால் பரபரப்பு
ADDED : செப் 23, 2024 05:46 AM

பாகூர், : லாரியில் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட, பழைய பிளாஸ்டிக் பொருள் மூட்டைகள் சாலையில் விழுந்ததில் வாகன ஓட்டிகள் காயமடைந்தனர்.
கடலுாரில் இருந்து நேற்று காலை காட்டுக்குப்பம் நோக்கி, டி.என். 70 ஏ 7799 என்ற பதிவெண் கொண்ட லாரி சென்றது. அதில், பழைய பிளாஸ்டிக் பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் மூட்டை மூட்டையாக அடுக்கி கொண்டு செல்லப்பட்டது.
முள்ளோடை நுழைவு வாயில் அருகே சென்ற போது, லாரியில் இருந்த பெரிய அளவிலான மூட்டைகள் சாலையில் விழுந்து உருண்டு ஓடி விபத்தை ஏற்படுத்தியது.அப்போது, அவ்வழியாக பைக்கில் சென்ற இரண்டு பேர் கீழே விழுந்து காயமடைந்தார். அங்கிருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலையில் கிடந்த மூட்டைகளை மீண்டும் லாரியில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினர்.