/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ெஷட்டில் இருந்த சாமி சிலையை வெளியே வைத்ததால் பரபரப்பு
/
ெஷட்டில் இருந்த சாமி சிலையை வெளியே வைத்ததால் பரபரப்பு
ெஷட்டில் இருந்த சாமி சிலையை வெளியே வைத்ததால் பரபரப்பு
ெஷட்டில் இருந்த சாமி சிலையை வெளியே வைத்ததால் பரபரப்பு
ADDED : ஜன 22, 2024 12:54 AM
புதுச்சேரி : சோலை நகரில் கோவில் புனரமைப்பு பணிக்காக 8 ஆண்டிற்கு முன், தனியார் ெஷட்டில் வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலையை வெளியே எடுத்து வைத்ததால் பரபரப்பு நிலவியது.
முத்தியால்பேட்டை, சோலை நகர், மார்க்கெட் எதிரில் சாலையோரம் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி கடந்த 8 ஆண்டிற்கு முன், துவங்கியது.
கோவில் சிலையை அருகில் உள்ள தனியார் இடத்தில் ெஷட் அமைத்து வைத்தனர். பல்வேறு பிரச்னைகளால் கோவில் திருப்பணி முடியவில்லை.
இதனால் தங்களின் இடத்தை கொடுக்குமாறு இடத்தின் உரிமையாளர்கள் வருவாய்த்துறை மூலம் கேட்டனர். ஆனால் கோவில் பணி முடிந்ததும் சிலைகளை எடுத்து கொள்வதாக தெரிவித்தனர்.
இதனிடையே கட்டுமான பணி துவங்க உள்ளதாக கூறி, தனியார் இடத்தின் உரிமையாளர்கள் ெஷட்டில் இருந்த சிலை மற்றும் சுவாமி படங்களை வெளியே எடுத்து வைத்தனர்.
இதை அறிந்த கோவில் கட்டும் பணியை மேற்கொண்டு வரும் சிலர், முத்தியால்பேட்டை காவல் நிலையம் முன், குவிந்தனர். போலீசார் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனிடையே வெளியே வைத்திருந்த சிலை, சாமி படங்கள் மீண்டும் ெஷட்டிற்குள் வைக்கப்பட்டன.