தில்லையாடி வள்ளியம்மை பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
தில்லையாடி வள்ளியம்மை பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : ஏப் 25, 2026 05:32 PM

புதுச்சேரி: கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
பள்ளியில் 2025-26 கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 122 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத வெற்றியை பதிவு செய்தனர். மாணவர்கள் முகேஷ்வரன், சிவசக்தி, தர்ஷினி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டும் வகையில், பள்ளியில் நேற்று முன்தினம் விழா நடந்தது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் வாசு தலைமை தாங்கி, முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்திப் பேசினார். தலைமை ஆசிரியர் (நிலை-2) கணபதி வரவேற்றார்.
தொடர்ந்து, பரிசு பெற்ற மாணவர்கள் தங்களது தேர்வு அனுபவங்களை பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு ஊக்கப்படுத்தினர். ஆசிரியர் சுகன்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
