/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் நாளை தீமிதி திருவிழா
/
முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் நாளை தீமிதி திருவிழா
முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் நாளை தீமிதி திருவிழா
முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் நாளை தீமிதி திருவிழா
ADDED : மே 14, 2025 11:32 PM
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில், நாளை (16ம் தேதி) தீமிதி திருவிழா நடக்கிறது.
கடலுார் சாலை முருங்கப்பாக்கம் சந்திப்பில், திரவுபதி அம்மன் கோவில் பிரமோற்சவ விழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து கடந்த 11ம் தேதி வரை அம்மன் வீதியுலா நடந்தது. 12ம் தேதி கரக திருவிழாவை அடுத்து நேற்று முன்தினம் பகாசூரன் வதம் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று திருக்கல்யாண உற்சவம், இன்று 15ம் தேதி மாலை அர்ச்சுனன் தவம் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்வான நாளை காலை 10:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு பூஜை, மாலை 6:00 மணியளவில், தீமிதி திருவிழா நடக்கிறது.