தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'தினமலர் பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி

'தினமலர் பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி

'தினமலர் பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி


ADDED : ஜன 22, 2025 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2025 06:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ஆருத்ரா நகர் வித்யா நிகேதன் மேல்நிலைப் பள்ளியில், தினமலர் பட்டம் இதழ் சார்பில் வினாடி வினா போட்டி நடந்தது.

புதுச்சேரி 'தினமலர் பட்டம்' இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து, 'பதில் சொல் பரிசு வெல்' என்ற மெகா வினாடி வினா போட்டி நடக்க உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்க, பள்ளி அளவிலான அணிகள் தேர்வு செய்யும் போட்டி, ஆருத்ரா நகர் வித்யா நிக்கேதன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

பள்ளி தாளாளர் பாலா பத்ம ராணி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சங்கரி, தமிழ் ஆசிரியர்கள் கோமதி, சுசி முன்னிலை வகித்தனர். வினாடி வினா போட்டியில், 6ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் 150 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

முதல் நிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தேர்வாகினர். தலா 2 பேர் கொண்ட 8 அணிகள் இறுதி சுற்றில் பங்கேற்றது.

இதில், 8ம் வகுப்பு மாணவி ஜீவிதா, 9ம் வகுப்பு மாணவர் சஞ்சய் முதலிடம் பிடித்தனர். 8ம் வகுப்பு மாணவி லக் ஷிதா, 6ம் வகுப்பு மாணவி சவுஜன்யா இரண்டாம் இடம் பிடித்தனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி அளவில் தேர்வான இரு அணிகளும், மெகா வினாடி வினா போட்டியில் பங்கேற்க உள்ளனர். இறுதி சுற்று போட்டியில் பங்கேற்ற மற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us