/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளஸ் 1 சேர்க்கைக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு
/
பிளஸ் 1 சேர்க்கைக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு
ADDED : ஆக 12, 2025 01:47 AM

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கல்வித்துறை சார்பில் பிளஸ்1 வகுப்பு(சி.பி.எஸ்.சி.,)சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடந்தது.
காரைக்கால் மாவட்டத்தில் கல்வித்துறை சார்பில் பிளஸ்1 வகுப்பு சி.பி.எஸ்.இ.,சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நேற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கல்வித்துறை துணை இயக்குநர் ஜெயா,முதன்மைக்கல்வி அதிகாரி விஜயமோகனா ஆகியோர் தலைமையில் நடந்தது.
இதில் விண்ணப்பிக்கப்பட்ட 136 பேர்களில், 10ம் வகுப்பு துணைதேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இதுவரை எந்த ஒரு பள்ளியிலும் சேராத, மற்றும் புதுச்சேரி குடியுரிமை இல்லாத மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் 128 மாணவர்கள் பிளஸ் 1 சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் ஞானபிரகாசி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

