தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குட்டியாண்டவர் கோவிலில் 28 ம் தேதி திருக்கல்யாணம்

குட்டியாண்டவர் கோவிலில் 28 ம் தேதி திருக்கல்யாணம்

குட்டியாண்டவர் கோவிலில் 28 ம் தேதி திருக்கல்யாணம்


UPDATED : ஆக 20, 2026 09:57 PM

ADDED : ஆக 20, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2026 09:57 PM ADDED : ஆக 20, 2026 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்:கடலுார், செல்லங்குப்பத்தில் உள்ள குட்டியாண்டவர் கோவிலில் வரும் 28ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

கடலுார் முதுநகர், செல்லங்குப்பத்தில், உப்பனாற்றங்கரை ஓரத்தில் பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் கடந்த 2003ம் ஆண்டு புதுப்பித்து கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிேஷக நாளன்று திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்தாண்டிற்கான திருக்கல்யாண உற்சவம் வரும் 28 ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி, அன்று காலை 8:00 மணிக்கு 108 சங்கு பிரதிஷ்டை செய்து யாகசாலை பூஜை நடக்கிறது. 10:00 மணிக்கு, மூலவருக்கு 108 சங்காபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் தீபராதனை நடக்கிறது. தொடர்ந்து, அருகில் உள்ள மண்டபத்தில் பூரணி புஷ்கா சமேத குட்டியாண்டருக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது. பின்னர் சுவாமி விதியுலா நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us