தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரியாங்குப்பம் கோவிலில் 8ம் தேதி திருக்கல்யாணம்

அரியாங்குப்பம் கோவிலில் 8ம் தேதி திருக்கல்யாணம்

அரியாங்குப்பம் கோவிலில் 8ம் தேதி திருக்கல்யாணம்


ADDED : நவ 01, 2024 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2024 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு, 10ம் ஆண்டு கந்தர் சஷ்டி விழா மற்றும் 11ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நாளை துவங்குகிறது.

இதையொட்டி, காலை 9:05 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலையில் காப்பு கட்டுதல், மகா தீபாராதனை நடக்கிறது. 3ம் தேதி மாலை 6:00 மணிக்கு சம்ஹார வேல் அபிஷேகம், 4ம் தேதி சூரபதுமன் திக் விஜயம், 5ம் தேதி முருகபெருமான் சிவபூஜை செய்தல், 6ம் தேதி மாலை 6:30 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு மற்றும் இரவு 8:00 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக, வரும் 7ம் தேதி மதியம் 2:30 மணிக்கு நவ வீரர்கள் ஊர்வலம், மாலை 4:30 மணிக்கு கந்தர் சஷ்டி சூரசம்ஹாரம் நடக்கிறது. 8ம் தேதி காலை 9:00 மணிக்கு வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us