/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாழைத்தார்களை 'ஆட்டய' போடும் கும்பல் திருக்கனுார் பகுதி விவசாயிகள் கவலை
/
வாழைத்தார்களை 'ஆட்டய' போடும் கும்பல் திருக்கனுார் பகுதி விவசாயிகள் கவலை
வாழைத்தார்களை 'ஆட்டய' போடும் கும்பல் திருக்கனுார் பகுதி விவசாயிகள் கவலை
வாழைத்தார்களை 'ஆட்டய' போடும் கும்பல் திருக்கனுார் பகுதி விவசாயிகள் கவலை
ADDED : செப் 28, 2025 07:54 AM
தி ருக்கனுார் பகுதிகளில் வாழைத்தார்களை குறிவைத்து மர்ம கும்பல் திருடி வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மண்ணாடிப்பட்டு தொகுதி, திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் கரும்பு, நெல், வாழை உள்ளிட்டவைகளை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர்.
தற்போது வாழைத்தார்கள் ஜோடி 300 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆவதால், விவசாயிகள் வாழை சாகுபடி செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதன்படி, பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வாழைகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், வாழைத்தார்களை குறிவைத்து, மர்ம கும்பல் திருடி வருகிறது.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இரவு நேரங்களில் மர்ம கும்பல், வாழைத் தோட்டங்களுக்கு சென்று, அங்கு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள 10க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். அறுவடை நேரத்தில் வாழைத்தார்கள் திருடு போவதால், விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'தொடர்ந்து, வாழைத்தார்கள் திருடு போவது குறித்து போலீசில் புகார் அளித்ததால் வாழைத்தார்கள் தானே விசாரிக்கிறோம் என சாதாரணமாக தெரிவிக்கின்றனர். அவற்றை சாகுபடி செய்ய எவ்வளவு செலவு செய்கிறோம்.
அறுவடைக்கு தயாராகும் நேரத்தில் மர்ம கும்பல் வாழைத்தார்களை திருடி செல்வதால், ஓராண்டுகளாக அதில் போட்ட உழைப்புகள் அனைத்தும் வீணாகி வருகிறது. இதற்கிடையே, போலீசாரை நம்பால் இரவு நேரங்களில் வாழைத்தார்கள் திருடு போகும் கிராமங்களில் வழியாக செல்லும் வாகனங்கள் குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 நாட்களுக்கு ஒரு முறை நம்பர் பிளேட் இல்லாத டாடா ஏஸ் வாகனம் ஒன்று தார்பாய் மூடியபடி செல்கிறது. ஆனால், அந்த வாகனம் எங்கு செல்கிறது என்பதை கண்டறிய முடியவில்லை.
ஆகையால், போலீசார் இரவு நேர ரோந்து பணிகளின் போது, அவ்வழியாக வரும் மினி வேன்களை சோதனை செய்து, வாழைத்தார்களை திருடி செல்லும் மர்ம கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.