/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'திருக்குறள் 100-காட்சியுரை' நிகழ்ச்சி
/
'திருக்குறள் 100-காட்சியுரை' நிகழ்ச்சி
ADDED : டிச 28, 2024 05:42 AM

புதுச்சேரி :  புதுச்சேரி திருக்குறள் மன்றம், ஆச்சாரியா கல்விக் குழுமம் சார்பில் 'திருக்குறள் 100-காட்சியுரை' நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தேங்காய்த்திட்டு ஆச்சாரியா பால சிக் ஷா மந்திர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, புதுச்சேரி திருக்குறள் மன்றத் தலை வர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார்.
ஆச்சார்யா கல்விக்குழும மேலாண் இயக்குநர் அரவிந்தன் முன்னிலை வகித்தார். மன்றச் செயலர் சிவ மாதவன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், திரைப்பட நடிகர் சிவக்குமார் பங்கேற்று, திருக்குறளை தலை சிறந்த மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளுடன் இணைத்து விளக்கவுரை ஆற்றினார்.
மன்ற பொருளாளர் செல்வகாந்தி சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். துணைத் தலைவர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை ஆச்சார்யா குழுமத்தை சேர்ந்த தர்மதுரை மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

